Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.15000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 13MP கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் பி சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றன. இதில் ரியல்மி பி4 லைட் 5ஜி (Realme P4 Lite 5G) ஸ்மார்ட்போன் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக களமிறங்கி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது, தள்ளுபடி விலையில் ரூ.15,000 பட்ஜெட்டுக்கு வந்துள்ளது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 43 சதவீத தள்ளுபடி விலைக்கு 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.825 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,674 விலைக்கு இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.15000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P4 Lite 5G Specifications): 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி இருக்கிறது. ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமராவை கொடுக்கிறது. செல்பீ & வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ கேமரா இதில் கிடைக்கிறது.

ஏஐ பூஸ்ட் (AI Boost), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image) பீச்சர்கள் கிடைக்கின்றன. இதில் ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) பீச்சர்கள் கிடைக்கின்றன. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

இதுபோக ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பைபாஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. 8.4 எம்எம் தடிமன் கொண்ட பாடி கிடைக்கிறது. இதுபோக 212 எம்எம் எடையுடன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது. ஆகவே, மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி இருக்கும். இதுபோக IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுத்து உள்ளது. மொசைக் கிரீன் (Mosaic Green), மொசைக் ப்ளூ (Mosaic Blue) ஆகிய 2 கலர்களில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme P4 Lite 5G With 4GB RAM Available At 43 Percent Discount on Flipkart Check Specications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X