நாளை விற்பனைக்கு வரும் புதிய Realme 5ஜி போன்.. மலிவு விலை.. 7000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் ரியல்மி பி4 லைட் 5ஜி (realme P4 Lite 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த போன் நாளை முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் நாளை மதியம் 12 மணி அளவில் ரியல்மி பி4 லைட் 5ஜி போனை வாங்க முடியும். இப்போது இந்த ரியல்மி போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4 லைட் 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. மேலும் இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,999 விலையிலும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் இந்த போனின் அறிமுக சலுகையாக ரூ.1000 தள்ளுபடியும், கூடுதலாக ரூ.500 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.

ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (realme P4 Lite 5G specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளது.
அதேபோல் 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டிஸ்பிளேவில் 1570×720 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதுவும் realme UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா உடன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி போன் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splah resistant) உடன் வெளியாகி உள்ளது. மேலும் MIL-STD 810H சர்டிபிகேஷன், டைப்-சி, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதிகளும் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன.

அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), 300% அல்ட்ரா வால்யூம் ஆடியோ போன்ற அம்சங்கள் உடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை 212 கிராம் ஆகும்.
மேலும் 7000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








