மே 9 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 7000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
வரும் மே 9-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் Sasa Lele Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். அதேபோல் 7000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ரியல்மி 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.
தற்போது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பி4 லைட் 5ஜி (realme P4 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த போன் ரூ.12,749 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (realme P4 Lite 5G specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளது.
6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டிஸ்பிளேவில் 1570×720 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
realme UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா உடன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ரியல்மி பி4 லைட் 5ஜி போன் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splah resistant) உடன் வெளியாகி உள்ளது. மேலும் MIL-STD 810H சர்டிபிகேஷன், டைப்-சி, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதிகளும் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன.

அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), 300% அல்ட்ரா வால்யூம் ஆடியோ போன்ற அம்சங்கள் உடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை 212 கிராம் ஆகும்.
7000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications