Home
Mobile

1 இல்ல.. 2 ஆர்டர் விழுது.. ரூ.13,774 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி 5G போன்.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே!

இந்திய மார்கெட்டில் ரியல்மி பி4ஆர்5ஜி (Realme P4R 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருப்பதை அடுத்து 7000mAh பேட்டரி கொண்ட ரியல்மி பி4 லைட் 5ஜி (realme P4 Lite 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. பிரீமியம் டிசைன் கொண்ட பட்ஜெட் மாடலாக இருப்பதால், விற்பனையில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ரியல்மி பி4ஆர்5ஜி ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டினால், முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட பி சீரிஸ் மாடல்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 50 சதவீத தள்ளுபடி போக ரியல்மி பி4 லைட் 5ஜி கிடைக்கிறது.

1 இல்ல.. 2 ஆர்டர் விழுது.. ரூ.13,774 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி 5G போன்!

இந்த தள்ளுபடியுடன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.14,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த நேரடி தள்ளுபடியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.725 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,774 விலையில் இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மொசைக் ப்ளூ, மொசைக் கிரீன் கலர்களில் கிடைக்கிறது.

ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P4 Lite 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ பூஸ்ட் (AI Boost) கொண்ட ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) வருகிறது.

144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டியை இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெகாபிக்சல் கம்மியாக இருந்தாலும் ஏஐ பீச்சர்கள் வருகின்றன. ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) போன்ற கேமரா பிரியர்களுக்கான பீச்சர்கள் கிடைக்கின்றன.

பெயருக்கு லைட் மாடலாக இருந்தாலும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இந்த பெரிய பேட்டரியுடன் 8.48 எம்எம் தடிமன் கிடைக்கிறது. 212 கிராம் எடை கொடுக்கப்பட்டு உள்ளது. ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் ஃபைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி கிடைக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் மற்றும் IP64 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது. மேலும், வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளது.

Best Mobiles in India

English summary
realme P4 Lite 5G Available At Discounted Price on Flipkart Ahead of Realme P4R 5G Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X