Home
Mobile

புதுசு வந்துருச்சு.. ரூ.13,999 க்கு பழசு.. 6000mAh பேட்டரி.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. 6GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரியல்மி பி4 லைட் 5ஜி (Realme P4 Lite 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. முன்னதாக வெளியான ரியல்மி பி3 லைட் 5ஜி (Realme P3 Lite 5G) ஸ்மார்ட்போனை விட கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் பின் தங்கி இருக்கிறது. இந்த மாடல்களின் பீச்சர்கள் எப்படி? விலை எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் கொண்ட மாடலாக ரியல்மி பி3 லைட் 5ஜி வெளியானது. இப்போது, அதே சிப்செட்டுடன் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் யுஐயில் மாற்றம் இருக்கிறது. டிசைனில் மாற்றம் உள்ளது. மொத்தமாக எப்படி இருக்கிறது?

புதுசு வந்துருச்சு.. ரூ.13,999 க்கு பழசு.. 6000mAh பேட்டரி.. மாடல்?

டிஸ்பிளே

ரியல்மி பி4 லைட் 5ஜி மாடலில் 6.8 (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே, எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. பி3 லைட் 5ஜி மாடலில் 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே, எச்பிளஸ் ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆகவே, பி4 லைட் 5ஜி கூடுதல் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது.

சிப்செட்

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட்டை ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ 6.0 கிடைக்கிறது. இதே சிப்செட்டை பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ 7.0 உள்ளது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

கேமரா

13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை ரியல்மி பி4 லைட் 5ஜி கொடுத்து உள்ளது. ஆனால், ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 32 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. கேமராவை பொறுத்தவரையில், முந்தைய வெர்ஷனான ரியல்மி பி3 லைட் 5ஜி மாடலே கிட்டத்தட்ட முந்தும்படி வெளியாகி இருக்கிறது.

பேட்டரி

ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 7000mAh பேட்டரி கிடைக்கிறது. பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டாலும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி கிடைத்தாலும், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. கேபாசிட்டியில் பி4 லைட் 5ஜி மாடலும், ஃபாஸ்ட் சார்ஜிங்கில் பி3 லைட் 5ஜி மாடலும் முந்துகின்றன.

டியூரபிலிட்டி

பி4 லைட் 5ஜி மாடலும் சரி, பி3 லைட் 5ஜி மாடலும் சரி ஒரே மாதிரியான டியூரபிலிட்டி பீச்சர்களை கொடுத்து உள்ளன. எம்ஐஎல்-எஸ்டிடி- 810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, டியூரபிலிடிட்டியில் எந்த அப்கிரேடும் பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் கொடுக்கப்படவில்லை.

டிசைன்

வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட மாடலாக ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே கிடைக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் பொதுவாக கிடைத்தாலும், பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பேக் பேனல் மல்டிபிள் ஷேட் கொடுக்கிறது. அதேபோல கர்வ் டிசைனும் புதிய லுக் கிடைக்கிறது.

விலை

ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. ரூ.700 பேங்க் டிஸ்கவுண்ட் போக பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. ரூ.1000 டிஸ்கவுண்ட் போக ரூ.14,999 க்கு கிடைக்க இருக்கிறது. மார்ச் 25 பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

முடிவு

பர்ஃபாமென்ஸ் மற்றும் கேமராவில் ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது, பழைய வெர்ஷனாக இருந்தாலும் முந்துகிறது. அதேபோல லேட்டஸ்ட் யுஐ மற்றும் பேட்டரி கேபாசிட்டியில் ரியல்மி பி4 லைட் 5ஜி முந்துகிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை புதிய வெர்ஷன் முந்தவில்லை. பேட்டரி, டிசைனில் மட்டும் கவனம் செலுத்தி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X