Home
Mobile

மிரளுது பட்ஜெட்.. 7.94 மிமீ ஸ்லிம் பாடி.. 6300mAh பேட்டரி.. IP54 ரேட்டிங்.. புது Realme போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் புதிய பட்ஜெட் விலை மாடலாக ரியல்மி பி4 லைட் 4ஜி (Realme P4 Lite 4G) ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. 7.94 மிமீ ஸ்லிம் பாடியில் 6300mAh பேட்டரி, IP54 ரேட்டிங், யுனிசோக் சிப்செட் கிடைக்க உள்ளது. இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதியாகி உள்ளது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி நிறுவனத்தின் பி சீரிஸ் மாடல்கள் மலிவான விலைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகின்றன. இதில் ரியல்மி பி3 லைட் (Realme P3 Lite) ஸ்மார்ட்போன் ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகி விற்பனையிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல மலிவான விலைக்கு ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.

மிரளுது பட்ஜெட்.. 7.94 மிமீ ஸ்லிம் பாடி.. 6300mAh பேட்டரி.. மாடல்?

வருகிற பிப்ரவரி 20ஆம் தேதியில் இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வெளியீட்டு தேதியுடன் மூன்று கலர்களில் கிடைக்க இருப்பதும், டூயல் கேமரா சிஸ்டம் வர இருப்பதும் உறுதியாக இருக்கிறது. மேலும், பேட்டரி, ஸ்லிம் பாடி மற்றும் சிப்செட் விவரங்களும் இப்போதே தெரிய வந்துள்ளன.

ரியல்மி பி4 லைட் 4ஜி அம்சங்கள் (Realme P4 Lite 4G Specifications): 7.94 மிமீ ஸ்லிம் பாடியில் 6300mAh பேட்டரியை இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு சார்ஜர் கொடுக்கப்படுகிறது. யுனிசோக் டி7250 ஆக்டா கோர் (UNISOC T7250 Octa Core) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுத்து உள்ளது. மேலும், 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. சர்கிள் டூ சர்ச் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு ஏஐ பீச்சர்களை கொடுக்கிறது.

ஆகவே, ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மெண்ட்ஸ் (AI Photo Enhancements), நாய்ஸ் ரெடக்சன் கால் 2.0 (Noise Reduction Call 2.0) போன்ற பீச்சர்களை பார்க்க முடிகிறது. பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் அல்லது அமேசான் தளத்தில் கிடைக்க இருப்பது ஓரிரு நாட்களில் உறுதி செய்யப்பட உள்ளது.

ரியல்மி பி3 லைட் அம்சங்கள் (Realme P3 Lite Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி3 லைட் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைத்துள்ளது. 32 எம்பி மெயின் கேமரா மற்றும் கேலக்ஸிகோர் சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,499ஆக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4 Lite 4G With 6300mAh Battery To Launch in India on February 20 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X