Home
Mobile

வெளுத்து கட்டுது சேல்.. ரூ.7,649 க்கு 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. OV கேமரா.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஓம்னிவிஷன் கேமரா, 90Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி பி4 லைட் 4ஜி (Realme P4 Lite 4G) ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்போது, பிளிப்காட் தளத்தில் 26 சதவீத தள்ளுபடி போக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,850 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.7,649 விலைக்கு இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

வெளுத்து கட்டுது சேல்.. ரூ.7,649 க்கு 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

ரியல்மி பி4 லைட் 4ஜி அம்சங்கள் (Realme P4 Lite 4G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கொடுக்கப்பட்டு உள்ளது.

6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 563 நிட்ஸ் எச்பிஎம் (HBM), 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16.7 கலர் டெப்த்தை இந்த டிஸ்பிளே கொண்டுள்ளது. ஓம்னிவிஷன் ஓவி12பி10 (Omnivision OV13B10) மெயின் கேமராவை கொடுத்துள்ளது.

மேலும், 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் எஸ்சி520சிஎஸ் (SC520CS) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம்-லேப்ஸ் (Time-lapse), டூயல் வியூ வீடியோ (Dual-view Video) பீச்சர்கள் உள்ளன. மேலும், போட்டோ மோட் (Photo Mode), வீடியோ மோட் (Video Mode), நைட் மோட் (Night Mode), ப்ரொபஷனல் மோட் (Professional Mode) பீச்சர்களையும் கொடுத்துள்ளது.

பல்ஸ் லைட் (Pulse Light) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 9 கலர் ஆப்ஷன்கள் மற்றும் 5 க்ளோவிங் மோட்கள் கிடைக்கின்றன. ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) கிடைக்கிறது. ஸ்மார்ட் டச் (Smart Touch) சப்போர்ட் கிடைத்துள்ளது. ஆகவே, IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைத்துள்ளது. MIL-STD 810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.

இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் 6300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் விலையில் கிடைப்பதால், அதற்கு ஏற்ப சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைத்துள்ளது.

இதுபோக அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது. 7.94 எம்எம் தடிமன் மற்றும் 201 கிராம் எடை கொடுத்துள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கொடுக்கிறது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black), சீ ப்ளூ (Sea Blue) மற்றும் பீச் கோல்டு (Beach Gold) கலர்களில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme P4 Lite 4G With 6300mAh Battery Available At 26 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X