Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.11,399 போதும்.. 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. OV கேமரா.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் 6000mAh கேபாசிட்டிக்கும் மேலான பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வேண்டுமானால், ரியல்மி பி4 லைட் 4ஜி (Realme P4 Lite 4G) ஸ்மார்ட்போன் பக்காவான ஆப்ஷனாக இருக்கிறது. இப்போது, தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலுக்கு 52 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.11,999 விலைக்கு வாங்கலாம். மேலும், ரூ.600 தள்ளுபடியை தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.11,399 விலைக்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.11,399 போதும்.. 6300mAh பேட்டரி!

ரியல்மி பி4 லைட் 4ஜி அம்சங்கள் (Realme P4 Lite 4G Specifications): 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 563 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 2 ஜிபிக்கு மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தலாம்.

13 எம்பி மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சாரை இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 5 எம்பி முன்பக்க கேமராவை செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக பயன்படுத்தி கொள்ளலாம். போட்டோ மோட் (Photo Mode), வீடியோ மோட் (Video Mode), நைட் மோட் (Night Mode), ப்ரோபஸ்னல் மோட் (Professional Mode) உள்ளது.

மேலும், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஹைப்பர் டெக்ஸ்ட் மோட் (HyperText Mode), டூயல் வியூ வீடியோ (Dual-view Video) கிடைக்கிறது. இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனுக்கு 6300mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 6W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் (USB Type-C Charging Port) கிடைக்கிறது.

7.94 எம்எம் தடிமன் மற்றும் 201 கிராம் எடை கொடுத்துள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), அல்ட்ரா-லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra-linear Bottom-ported Speaker) மற்றும் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொண்ட (Dust & Splash Resistant) கொண்ட IP54 ரேட்டிங் கிடைக்கிறது.

மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டிகாக MIL-STD 810H சர்டிபிகேஷன் கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) கனெக்டிவிட்டிகள் உள்ளன. மேலும், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) மற்றும் கியூஇசட்எஸ்எஸ் (QZSS) கிடைக்கிறது. சீ ப்ளூ, அப்சிடியன் பிளாக், பீச் கோல்டு கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme P4 Lite 4G With 4GB RAM 52 Percent Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X