நாளைக்கு லான்ச் ஆகும் புத்தம் புதிய Realme போன்.. 6300mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
இந்தியாவில் நாளை (பிப்ரவரி 20) ரியல்மி பி4 லைட் 4ஜி (Realme P4 Lite 4G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான ரியல்மி பி4 லைட் 4ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி பி4 லைட் 4ஜி அம்சங்கள் (Realme P4 Lite 4G Specifications): 6.67 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 180Hz டச் சாம்பிளிங் ரேட், 563 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் யுனிசோக் டி7250 ஆக்டா கோர் (UNISOC T7250 Octa Core) சிப்செட் உடன் ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதியுடன் ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் ( dust and splash resistance) ஆதரவுடன் இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
13எம்பி டூயல் ரியர் கேமராக்கள் இந்த ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மெண்ட்ஸ் (AI Photo Enhancements), நாய்ஸ் ரெடக்சன் கால் 2.0 (Noise Reduction Call 2.0), சர்கிள் டூ சர்ச் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6300mAh பேட்டரி உடன் ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி பி4 லைட் 4ஜி மாடல் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








