அப்படி போடு.. செம ஆஃபரில் Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி4 5ஜி (realme P4 5G) ஸ்மார்ட்போன் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
இப்போது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைவான விலையில் வாங்க முடியும்.

ரியல்மி பி4 5ஜி அம்சங்கள் (realme P4 5G Specifications) : தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட்டால் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த ரியல்மி போனில் உள்ளது.
அதுவும் 7000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் சார்ஜில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் வெப்ப மேலாண்மைக்காக 7000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமையும் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். ஏஐ எடிட் ஜீனி, ஏஐ டிராவல் ஸ்னாப் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும் Android 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ் வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








