Home
Mobile

ஆக.20 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க.. 7.68மிமீ போனில் 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 144Hz டிஸ்பிளே!

7000mAh டைட்டன் பேட்டரி (Titan Battery), 144ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான ஹைப்பர்க்ளோ அமோஎல்இடி டிஸ்பிளே (HyperGlow AMOLED Display) உட்பட பல முரட்டு அம்சங்களுடன் 2 புதிய ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன்கள் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அது ரியல்மி பி4 சீரீஸ் (Realme P4 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதன்கீழ் ரியல்மி பி4 5ஜி (Realme P4 5G) மற்றும் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) என 2 மாடல்கள் வெளியாக உள்ளன. என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

ஆக.20 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க.. 7.68மிமீ போனில் 7000mAh பேட்டரி!

ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? பிளிப்கார்ட் இல் உள்ள மைக்ரோசைட் வழியாக இவ்விரு ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி (MediaTek Dimensity 7400 Ultra 5G) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதும், இது ஒரு பிரத்யேக பிக்சல்வொர்க்ஸ் (Pixelworks) சிப்புடன் இணைக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சில சூழ்நிலைகளில் 4,500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் ஹைப்பர்க்ளோ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே 3840ஹெர்ட்ஸ் பி டபுள்யூஎம் டிம்மிங், ஹார்ட்வேர்-லெவல் ப்ளூ லைட் மற்றும் ஃப்ளிக்கர் ரிடெக்ஷன் ஆகியவற்றையும் ஆதரிக்கும்.

பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7000mAh டைட்டன் பேட்டரியுடன் வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிஜிஎம்ஐ (BGMI) கேம்ப்ளேவை 11 மணிநேரம் வரை வழங்கும் என்றும் ரியல்மி நிறுவனம் கூறுகிறது. மேலும் இது வெறும் 25 நிமிடங்களில் சுமார் 50 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும்

மேலும் இது ரிவர்ஸ் சார்ஜிங், ஏஐ ஸ்மார்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவுடன் வரும். கடைசியாக ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஹெட்டிங்கை பராமரிக்க 7,000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமை (7,000 sq mm AirFlow VC cooling system) கொண்டிருக்கும்.

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? ப்ரோ வேரியண்ட் ஆன ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிரத்யேக ஹைப்பர்விஷன் ஏஐ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஸ்டாண்டர்ட் மாடலை போலவே ப்ரோ மாடலும், 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். கூடுதலாக இந்த போன் 10W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும். இது 90FPS வேகத்தில் 8 மணிநேர பிஜிஎம்ஐ கேம்பிளேவை வழங்கும் என்று கூறப்படுகிறது. இதிலும் ஸ்டாண்டர்ட் மாடலில் உள்ள அதே விசி கூலிங் சிஸ்டம் உள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது ஹைப்பர்க்ளோ அமோஎல்இடி 4டி கர்வ் பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 144ஹெர்ட்ஸ், 6500 நிட்ஸ் லோக்கல் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10+ சான்றிதழ் மற்றும் கண் பாதுகாப்பிற்கான TÜV Rheinland சான்றிதழையும் கொண்டிருக்கும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 7.68 மிமீ தடிமனாக இருக்கும் என்பதையும் ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரியல்மி பி4 சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.18,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சரியான விலைகள் ஆகஸ்ட் 20 நடக்கும் வெளியீட்டின் போது அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4 5G Realme P4 Pro 5G Major Specifications Revelead Ahead Launch on August 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X