நாளை களமிறங்கும் புது ரியல்மி 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 15டி 5ஜி (Realme 15T 5G) ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. 7000எம்ஏஎச் பேட்டரி, ஐபி69 ரேட்டிங், AMOLED டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த புதிய ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிகார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 15டி போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.22,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.24,999 விலையிலும் வாங்க முடியும்.

ரியல்மி 15டி அம்சங்கள் (realme 15T specifications): ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 எஸ்ஒசி (octa-core MediaTek Dimensity 6400 SoC) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
6.57-இன்ச் 4ஆர் கம்போர்ட் பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (4R Comfort+ AMOLED display)உடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080×2,372 பிக்சல்ஸ், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) உள்ள பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் 6,050 sq mm ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமை ( 6,050 sq mm AirFlow vapour chamber cooling system) கொண்டுள்ளது இந்த போன். இது இருப்பதால் நீண்ட நேரம் போனில் கேம் விளையாடினாலும் போன் சூடாகாது. அதேபோல் ரயில்மி யுஐ 6 (Realme UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய ரியல்மி போனை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இந்த புதிய ரியல்மி போனில் 7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ, யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ப்ளோயிங் சில்வர் (Flowing Silver), சில்க் ப்ளூ (Silk Blue) மற்றும் சூட் டைட்டானியம் (Suit Titanium) நிறங்களில் இந்த வாங்க போன் கிடைக்கும்.
ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், AI எடிட் ஜெனி, AI ஸ்னாப் மோட், AI லேண்ட்ஸ்கேப் போன்ற பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன.
குறிப்பாக இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), IP69, IP68 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio),
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio)உள்ளிட்ட வசதிகளும் இந்த புதிய ரியல்மி போனில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications