Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புதிய Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை தொடங்க உள்ளது. அதாவது நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்கலாம். இப்போது ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி பி4 5ஜி அம்சங்கள் (realme P4 5G Specifications) : 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நாளை விற்பனைக்கு வரும் புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ஹைப்பர் விஷன் சிப்புடன் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட்டால் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதுவும் Android 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ் வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

வெப்ப மேலாண்மைக்காக 7000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமையும் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஏஐ எடிட் ஜீனி, ஏஐ டிராவல் ஸ்னாப் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த ரியல்மி போனில் உள்ளது.

7000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிங்கள் சார்ஜில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,499-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.21,499-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme P4 5G phone will go on sale for the first time tomorrow: check price, specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X