Home
Mobile

ஆகஸ்ட் 20 உறுதி.. ரூ.17,499 விலையில் அறிமுகமாகும் புது Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி இந்தியாவில் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய ரியல்மி போனினி விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி பி4 5ஜி அம்சங்கள் (Realme P4 5G full specifications): 6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் AMOLED டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 10-பிட் கலர் டெப்த், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஆகஸ்ட் 20 உறுதி.. ரூ.17,499 விலையில் அறிமுகமாகும் புது Realme 5ஜி போன்

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400(MediaTek Dimensity 7400) சிப்செட் உடன் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் வெளிவரும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா இடம்பெற்றுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது.

ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதி இந்த ரியல்மி போனில் உள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP65 + IP66 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும்யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி5.4, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.17,499 விலையில் இந்த புதிய ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4 5G full specifications leaked ahead of launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X