விஸ்வரூப விற்பனை.. வெறும் ரூ.12,379 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வீகன் லெதர் பேனல் ஸ்மார்ட்போன்களில் பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரியுடன் வெளியாகிய (Realme P3x 5G) போனுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் தள்ளுபடி கிடைப்பதால், அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ளலாம். 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் கொடுக்கும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் வீகன் லெதர் பேனலுடன் மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இதுபோக மிட்-ரேஞ்ச் விலைக்கு கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் IP69 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் இந்த ரியல்மியில் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் மாடல்களுக்கு நிகரான டியூரபிலிட்டி கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும் இருக்கிறது. இந்த பட்ஜெட் ரூ.1,000 விலை குறைப்பில் கிடைக்கிறது. அதாவது, மார்கெட் விலையை பார்க்கையில், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.13,999 பட்ஜெட்டில் இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.14,999 பட்ஜெட்டில் வெளியாகியது. இப்போது, ரூ.1,000 கம்மியாக வாங்க கிடைக்கிறது. இதுபோக ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்தால், உங்களுக்கு ரூ.620 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.12,379 பட்ஜெட்டில் இந்த வீகன் லெதர் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): இந்த 5ஜி போனில் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் மூலம் பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் உறுதியாகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஏஐ பீச்சர்களுடன் கூடிய ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது.

கேமிங் மற்றும் வீடியோ அவுட்புட்டில் மீடியம் அவுட்புட் எதிர்பார்க்கும்படி மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஆர்மர்ஷெல் கிளாஸ் (Armorshell Glass) புரொடெக்சன் மட்டுமல்லாமல், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனை கொடுத்து இருக்கிறது.
மேலும், இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமல்லாமல், ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனில் ஓம்னிவிஷன் ஓவி50டி (OMNIVISION OV50D) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா உள்ளது.
மேலும், 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த டூயல் கேமரா மூலம் 1080p ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். வீகன் லெதர் பேனலுடன் லூனார் சில்வர் (Lunar Silver), மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) கலர்களில் ஆர்டர் செய்யலாம். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பெரிய 6000mAh பேட்டரியை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








