Home
Mobile

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. ரூ.12,000 போதும்.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்த பட்ஜெட்டுக்கு கிடைச்சா வாங்காம எப்படி இருக்க முடியும்? அப்படினு சொல்லும்படியான பட்ஜெட் விலையில் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3X 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட ரூ.2,000 அதிகமாக செலவு செய்தால் போதும், 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, வீகன் லெதர் பேனலை பெற்று கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999 பட்ஜெட்டில் வெளியாகியது. இப்போது, ரூ.2,500 நேரடியாக விலை குறைப்பு போக ரூ.12,499 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த விலையிலும் கூடுதலாக ரூ.625 பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.11,874 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். இது ரூ.12,000 பட்ஜெட்டைவிட மலிவான விலையாக இருக்கிறது.

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. ரூ.12,000 போதும்.. 6000mAh பேட்டரி.. மாடல்?

ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், கூடுதலாக 10 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 18 ஜிபி ரேம் அவுட்புட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சராக 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி இருக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்கள், ஓடிடி பிரியர்களுக்கு பக்கா பேக்கப் கிடைக்கும்.

மேலும், 7.94 எம்எம் தடிமன் மட்டுமே வருவதால், ஸ்லிம் டிசைனில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கும் இது பக்காவாக இருக்கும். வெறும் 197 கிராம் எடை வருகிறது. இந்த எடையில் இருப்பதால், வீகன் லெதர் பேனல் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் கொடுக்கப்படுகிறது.

இதுபோக மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military-grade Shock Resistance) மற்றும் ஆர்மர்ஷெல் கிளாஸ் (Armorshell Glass) டிஸ்பிளே புரொடெக்சன் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இருப்பது தெரிகிறது. இந்த டிசைனில் மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் லூனார் சில்வர் (Lunar Silver) கலர்களில் கிடைக்கிறது.

மேலும், ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) கலரும் கிடைக்கிறது. இதில் ப்ளூ மற்றும் பிங்க் கலர் மாடல்களில் வீகன் லெதர் பேனல் கொடுக்கப்படுகிறது. 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்டிசி (LCD) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) ரெசொலூஷன் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

ஓம்னிவிஷன் ஓவி50டி (OmniVision OV50D) 50 எம்பி மெயின் + 2 எம்பி போர்ட்ராய்டு கேமராவை இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P3X 5G With 6000mAh Battery Available At Rs 12499 Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X