யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. VEGAN பேனல்.. எந்த மாடல்?
பிரீமியம் வேகன் லெதர் பேக் பேனலுடன் 7.9 மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடி மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, டைமன்சிட்டி 6400 சிப்செட் போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) போன் வெளியாக இருக்கிறது. இந்த ரியல்மி போனின் வெளியீட்டு தேதி, பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் வெளியாக இருக்கும் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி (Realme P3 Pro 5G) போனுக்காக ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் காத்திருக்கிறார்கள். ஆனால், பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்கள் தங்களுக்கான மாடல் இது இல்லையே என்று நினைத்தனர். ஆனால், அவர்களையும் தட்டித்தூக்கும்படி ரியல்மி பி3எக்ஸ் 5ஜி வெளியாக இருக்கிறது.

இந்த 2 மாடல்களும் பிப்ரவரி 18ஆம் தேதி இந்திய மார்கெட்டில் களமிறங்குகின்றன. ஒவ்வொரு மாடலும் ஒரு பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைக்க இருப்பதால், மார்கெட்டில் தனி கவனம் பெற்றுள்ளன. இதில் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனானது இந்த பட்ஜெட்டில் டைமன்சிட்டி 6400 சிப்செட் கொண்ட முதல் மாடலாக களமிறங்க இருக்கிறது. இதனால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): இந்த ரியல்மி போனின் டிசைன், சிப்செட், பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்கள் அதிகார்பபூர்வமாக வெளியாகி இருக்கின்றன. ஆகவே, இந்த போனானது வேகன் லெதர் பேனல் கொண்ட மிட்நைட் ப்ளூ (Midnight Blue) கலரில் கிடைக்க இருக்கிறது. லூனார் சில்வர் (Lunar Silver) மற்றும் ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) கலர்களும் உள்ளன.
பிளாட் டிஸ்பிளே டிசைனில் 7.9 மிமீ தடிமன் மட்டுமே கொண்ட அல்ட்ரா ஸ்லிம் மாடலாக வெளியாக இருக்கிறது. பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் அவுட்புட் கொடுக்கும்படி மீடியாடெக் டைமன்சிட்டி 6400 5ஜி (MediaTek Dimensity 6400 5G) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
ஒரே சார்ஜில் 2 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நிகரான டியூரபிலிட்டி எதிர்பார்க்கும்படி IP68 + IP69 ரெசிஸ்டன்ட் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த போன் மூலம் ஸ்வெட், ஸ்பில்ஸ் மட்டுமல்லாமல், ரெயின் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
இதுபோக மிலிட்டரி-கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military-grade Shock Resistance) வருகிறது. இந்த பீச்சர்களை மட்டுமே ரியல்மி நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. மற்ற பீச்சர்கள் வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், பட்ஜெட் மாடலாக வெளியாக இருப்பது உறுதியாகும்.
பிப்ரவரி 18ஆம் தேதி வெளியீடு நடக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே நாளில் வெளியாக இருக்கும் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போனும் பிளிப்கார்ட் தளத்திலேயே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, பட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு மாடலும், மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கு ஒரு மாடலும் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








