மிரளுது பட்ஜெட்.. ரூ.13,999 போதும்.. 18GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்தியாவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களுக்காகவே வேகன் லெதர் பேனல் டிசைன் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 18 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) போன் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதியில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

பிளாட் டிசைனில் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், ஆர்மோர்ஷெல் கிளாஸ் (ArmorShell Glass) பாதுகாப்பு மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) வருகிறது.
இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 10 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 18 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. இந்த வேரியண்ட்களில் 2 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம்.
50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் IP68 + IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, 2 மீட்டர்கள் ஆழம் வரையில் இந்த போன் தாக்குப்பிடிக்க கூடியது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மட்டுமல்லாமல், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. இந்த செக்மெண்டில் எதிர்பார்க்காதபடி 6000mAh பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனில் மிட்நைட் ப்ளூ (Midnight Blue), லூனார் சில்வர் (Lunar Silver) மற்றும் ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) கலர்கள் கிடைக்க இருக்கின்றன. இதில் மிட்நைட் ப்ளூ வேரியண்ட் வேகன் லெதர் பேனலை கொடுக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 13,999 ஆக இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.13,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 28ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட்டில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications