செய்கைனா இதுதான்.. ரூ.10,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) ஸ்மார்ட்போன், விலை குறைப்பு போக விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால், மார்கெட் விலையில் இருந்து மலிவான விலைக்கு ஆர்டர் செய்ய முடியும். இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை கொடுக்கிறது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் விலை, பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட போது, 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும் இருந்தது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,000 நேரடி விலை குறைப்பு போக விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.10,999 பட்ஜெட்டில் வாங்கலாம். அதேபோல 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.11,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட பேங்க் கிரெடிட் கார்டுளுக்கு ரூ.550 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.5,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.
வீகன் லெதர் பேனல் கொண்ட மாடலாக இது இருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும். இந்த லெதர் பேனலுடன் மிட்நைட் ப்ளூ (Midnight Blue) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக லூனார் சில்வர் (Lunar Silver) மற்றும் ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஆர்மர்ஷெல் கிளாஸ் (Armorshell Glass) புரொடெக்சன் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) கிடைக்கிறது.
அதேபோல வழக்கமாக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருந்தும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் அதற்கு கிடைக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்படுகிறது.
மேலும், லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) வருகிறது. ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் கிடைப்பது மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. அதேபோல மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
ரியல் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50டி (OMNIVISION OV50D) சென்சாருடன் 50 எம்பி மெயின் + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. முக்கியமாக 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. சைடு-பிங்கர்பிரிண்ட், ஹை-ரெஸ் ஆடியோ, ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் உள்ளது.


Click it and Unblock the Notifications








