இப்படி இருக்கணும் தீபாவளி ஆபர்.. ரூ.10,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதுவரையில் கிடைக்காத மலிவு விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 6400 6என்எம் சிப்செட் கொண்ட இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.10,249 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.11,249 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது.

மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டு, ஆக்சிஸ் கிரெடிட் கார்டு போன்றவற்றுக்கு ரூ.110 பேங்க் தள்ளபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,139 பட்ஜெட்டில் இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். ரூ.5,840 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த விலைக்கு கிடைக்கும் மாடல்களில் வரும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
இதுபோக ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆர்மர்ஷெல் கிளாஸ் (Armorshell Glass) புரொடெக்சன் கொண்ட 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
இதுபோக 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் கிடைக்கும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
கேமிங் பிரியர்கள் விரும்பும்படி 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும், 7.94 எம்எம் தடிமனில் ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதேபோல 197 கிராம் எடை கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50டி (OV50D) சென்சார் கிடைக்கிறது.
8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. சைடு-பிங்கர்பிரிண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது. இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மிட்நைட் ப்ளூ (Midnight Blue), லூனார் சில்வர் (Lunar Silver) மற்றும் ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. வீகன் லெதர் பேனல் மற்றும் மெட்டாலிக் மிடில் ஃபிரேம் பினிஷிங்குடன் பிரீமியம் லுக் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








