வெளுக்குது விற்பனை.. ரூ.12,999 போதும்.. 12GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 12 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும்படியான வீகன் லெதர் பேனலை கொடுக்கும் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) போனுக்கு நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது, ஆர்டர் செய்தால், மார்கெட் விலையைவிட மலிவான கிடைக்கிறது. இதனால், ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், வீகன் லெதர் பேனல் ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் கஸ்டமர்களும் ஆர்டர் செய்து வருகின்றனர்.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி பிளிப்கார்ட் சேல் (Realme P3x 5G Flipkart Sale): இந்த ரியல்மி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. ஆனால், இப்போது ரூ.1000 நேரடி விலை குறைப்பு போக ஆர்டருக்கு கிடைக்கிறது.

ஆகவே, 6 ஜிபி ரேம் மாடலை ரூ.12,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் மாடலை ரூ.13,999 பட்ஜெட்டிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். இது பேங்க் டிஸ்கவுண்ட் கிடையாது. நேரடி விலைக்கு சலுகையாகும். 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. லூனார் சில்வர் (Lunar Silver), மிட்நைட் ப்ளூ (Midnight Blue), ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) கலர்கள் இருக்கிறது.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): இந்த போனில் ஆர்மர்ஷெல் கிளாஸ் (Armorshell Glass) பாதுகாப்புடன் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் பெற்று கொள்ளலாம்.
பட்ஜெட் மாடலாக இருப்பதால் கேமராவில் சென்சார்கள் மற்றும் ஓஐஎஸ், ஈஐஎஸ் போன்றவற்றை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், பிரீமியமான டிசைனில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 1080p வீடியோ ஷூட், 720p ஸ்லோவ் மோஷன் கிடைக்கிறது.

மேலும், மல்டி சீன் வீடியோ, நைட் வியூ, டில்ட்-ஷிப்ட், ஏஐ வீடியோ டிராக்கிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் அண்டர் வாட்டர் கேமரா (Underwater Camera) கிடைக்கிறது. இதற்காக IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொடுக்கும் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக ஷாக் ரெசிஸ்டன்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது
இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனின் பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில், 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) வருகிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேக் செய்துள்ளது.
கேமிங் பிரியர்கள் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு அதிக பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 2 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்களை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








