Home
Mobile

பிளிப்கார்ட் காலி.. வெறும் ரூ.12,999 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

அடிமட்ட பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், பிரீமியம் வேகன் லெதர் பேனல் டிசைனில் வெளியாகிய ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கி இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 2 டிபி மெமரி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் IP68 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனின் முழு விவரங்கள் இதோ.

ரியல்மி பி3எக்ஸ் 5ஜி பிளிப்கார்ட் சேல் (Realme P3x 5G Flipkart Sale): இந்த ரியல்மி போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 13,999ஆகவும், 8 ஜிபி ரேம் (10 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் போக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

பிளிப்கார்ட் காலி.. வெறும் ரூ.12,999 போதும்.. 6000mAh பேட்டரி.. மாடல்?

ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஆக்சிஸ் போன்ற பேங்க் கார்டுகளுக்கு இந்த ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme P3x 5G Specifications): இந்த ரியல்மி போனின் டிசைன் பிரீமியம் மாடல்களுக்கு நிகரான லுக் கொடுக்கிறது. ஏனென்றால், வேதர் லெதர் பினிஷிங் பேக் பேனல் கொண்ட மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் லூனார் சில்வர் (Lunar Silver) கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இதுபோக ஸ்டெல்லர் பிங்க் (Steller Pink) கலரிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஆர்மோர்ஷெல் கிளாஸ் (ArmorShell Glass) புரொடெக்சன் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி மாடலில் 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களை கொடுக்கும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் பிரீமியம் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) வருகிறது.

இந்த பட்ஜெட்டில் ஹை-லைட் பீச்சராக IP68 மற்றும் IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ரெசிஸ்டன்ட் மூலம் 2 மீட்டர்கள் ஆழம் வரையில் புரொடெக்சன் கிடைக்கும். கேமரா சிஸ்டம் பட்ஜெட்டுக்கு ஏற்ப கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) பீச்சர் கிடைக்கிறது.

இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போனுக்கு மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance) கிடைக்கிறது. முன்னதாக சொன்னதுபோல அடிமட்ட பட்ஜெட்டில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 5ஜி கனெக்டிவிட்டி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme P3x 5G With 50MP Camera 6GB RAM Sale Under Rs 13000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X