ஆபர் விலையில் Realme 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (realme P3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 6000mAh பேட்டரி, ஐபி69 ரேம், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (realme P3x 5G) ஸ்மார்ட்போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.10,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (realme P3x 5G specifications): ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core MediaTek Dimensity 6400) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.
அதுவும் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ரியல்மி போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக realme UI 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அசத்தலான ரியல்மி போன் அறிமுகம் செய்யப்பட்டது.
6000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போன் இரண்டு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதால் வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி போனில் உள்ளன. இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த ரியல்மி போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








