மார்க்கெட்டே மிரள போகுது.. 256ஜிபி மெமரி.. ஆண்ட்ராய்டு 15 OS.. வருகிறது புதிய ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ரியல்மி பி3 அல்ட்ரா (Realme P3 Ultra) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம். அதாவது வரும் வாரங்களில் இந்த ரியல்மி பி3 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சில அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி பி3 அல்ட்ரா அம்சங்கள் (Realme P3 Ultra Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8300 சீரிஸ் (MediaTek Dimensity 8300 series SoC) சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி பி3 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் மாலி ஜி615 எம்சி6 ஜிபியு (Mali G615 MC6 GPU) கிராபிக்ஸ் உடன் இந்த போன் வெளிவரும்.

அதேபோல் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி பி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரியல்மி பி3 அல்ட்ரா போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது, கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகமான ரியல்மி பி3 ப்ரோ 5ஜி (Realme P3 Pro 5G) போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி பி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P3 Pro 5G Specifications): 6.83 இன்ச் 3டி கவ்ர்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி. மேலும் இதன் டிஸ்பிளேவில் ஸ்மார்ட்-ஆன்டி மிஸ் டச் சப்போர்ட், 2800 x 1272 பிக்சல்கள், வெட் ஹேண்ட் டச் கன்ட்ரோல் (Wet Hand Touch Control), 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 2500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட்உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode), லைவ் போட்டோ (LIVE Photo)போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பின்பு 16 எம்பி செல்பீ கேமரா கொண்டு வெளிவந்துள்ளது ரியல்மி பி3 ப்ரோ 5ஜி மாடல்
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் வசதியுடன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6000mAh பேட்டரி வசதியுடன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. பின்பு இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது.
நெபுளா க்ளோவ் (Nebula Glow), கேலக்ஸி பர்பிள் (Galaxy Purple) மற்றும் ஸ்டார்ன் பிரவுண் (Saturn Brown) ஆகிய நிறங்களில் இந்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பின்பு 199 கிராம் எடை கொண்டுள்ளது இந்த போன். பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.23,999 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








