அந்த செல்லத்த தூக்கிட்டு வாங்க பா.. 6000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெறும்big bang diwali sale எனும் சிறப்பு விற்பனையில் பல அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (realme P3 Ultra 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Realme P3 Ultra 5G Specifications): 6.83 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 x 1272 பிக்சல்கள், 1.5K ரெசல்யூஷன், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் போன்ற பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 அல்ட்ரா 4என்எம் (Octa Core Dimensity 8350 Ultra 4nm) சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்தது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி614 எம்சி6 ஜிபியு (Mali G615 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஜிடி பூஸ்ட் (GT BOOST), 90FPS பிஜிஎம்ஐ கேம்பிளேபோன்ற வசதிகளும் இந்த சாதனத்தில் உள்ளன.
50 எம்பி மெயின் கேமரா (Sony IMX896) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வசதியுடன் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனில் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த ரியல்மி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி 2.0 (AI Ultra Clarity 2.0), ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0),ஏஐ ரெக்கார்டிங் சம்மரி (AI Recording Summary), ஏஐ ஸ்மார்ட் லூப் (AI Smart Loop), ஏஐ ரைட்டர் (AI Writer) போன்ற போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

இதுதவிர சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற வசதிகளும் இந்த ரியல்மி போனில் உள்ளன. அதேபோல் இந்த போனில் IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ரெசிஸ்டன்ட் மூலம் 2 மீட்டர்கள் ஆழம் வரையில் 30 நிமிடங்களுக்கு இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி தாக்குப்பிடிக்கும் என ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.
6000mAh பேட்டரி வசதியுடன் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 1.8 மணி நேரங்களுக்கு கேமிங் அவுட்புட் கொடுக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








