Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.22,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேனல், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, சோனி சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம், IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (Realme P3 Ultra 5G) போன் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஸ்லிம்மஸ்ட் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே மாடலாக களமிறங்கி இருக்கும் இந்த போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் பிரியர்களுக்கு 7.38 எம்எம் தடிமனில் 6000mAh பேட்டரி கேபாசிட்டியுடன் இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி கிடைக்கிறது. வெறும் 183 கிராம் எடையில் ஹேண்டி மாடலாக இருக்கிறது. லெதர் பேனல் மற்றும் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே டிசைன் கிடைப்பதால், பட்ஜெட்டில் பிரீமியம் ஃபீல் கொடுக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.22,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி மாடல்!

ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Realme P3 Ultra 5G Specifications): இந்த ரியல்மியில் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது. ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி 2.0 (AI Ultra Clarity 2.0), ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) பீச்சர்கள் வருகின்றன.

இதுபோக ஏஐ ரெக்கார்டிங் சம்மரி (AI Recording Summary), ஏஐ ஸ்மார்ட் லூப் (AI Smart Loop), ஏஐ ரைட்டர் (AI Writer) போன்ற ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0 ) கிடைக்கிறது. மேலும், வழக்கமான சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. கேமராவிலும் ஏஐ பீச்சர்கள் வருகின்றன.

ஆகவே, ஏஐ லைவ் போட்டோ (AI Live Photo), ஏஐ எடிட்டர் (AI Editor), ஏஐ மோஷன் டீபிளர் (AI Motion Deblur) கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.22,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி மாடல்!

இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் மாடலில் 14 ஜிபி டைனாமிக் ரேம் கிடைக்கிறது.

IP69 ரேட்டிங் டாப்-டயர் வாட்டர் ரெசிஸ்டன் மற்றும் IP66 + IP68 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. 80W சார்ஜிங் பேக் செய்கிறது.

கூலிங் சிஸ்டமுடன் 6000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட், ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்க இருக்கிறது.

மேலும், 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் 1 வருட வாரண்டி வருகிறது. ஆகவே, ரூ.22,999 ஆரம்ப விலைக்கு இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். இன்று ப்ரீ-ஆர்டர் தொடங்குகிறது. மார்ச் 25ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

FAQs
GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P3 Ultra 5G With 50MP Camera Launched Flipkart Sale From March 25 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X