Home
Mobile

மொத்த ஆர்டரும் இந்த ஒத்த போனுக்கு.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (Realme P3 Ultra 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் தள்ளுபடி கிடைப்பதால், இதுவரையில் கிடைக்காத மலிவு விலைக்கு வாங்கி கொள்ளலாம். 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 6000mAh பேட்டரி, 80W சார்ஜிங் மட்டுமல்லாமல், வீகன் லெதர் பேனல் கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் கொண்ட இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.

பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது. இந்த விலை நேரடி விலை குறைப்பில் கிடைக்கிறது. ஏனென்றால், மார்கெட் விலையை பார்க்கையில், 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.26,999 பட்ஜெட்டில் இருக்கிறது.

மொத்த ஆர்டரும் இந்த ஒத்த போனுக்கு.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி!

அதேபோல 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.27,999 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, ரூ.8,000 விலை குறைப்பு போக 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. அதேபோல 256 ஜிபி வேரியண்ட் ரூ.2,000 விலை குறைப்பில் கிடைக்கிறது. இதுபோக குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு பேங்க் தள்ளுபடி மற்றும் ஈஎம்ஐ சலுகைகள் கிடைக்கின்றன.

ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Realme P3 Ultra 5G Specification): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட் அவுட்புட்டுக்கு ஏற்ப மாலி ஜி615 எம்சி6 ஜிபியு (Mali G615 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் உள்ளது. லேட்டஸ்ட் ரியல்மி ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி 2.0, ஏஐ எரைசர் 2.0, ஏஐ ஸ்னாப் மோட் போன்ற பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது.

மொத்த ஆர்டரும் இந்த ஒத்த போனுக்கு.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி!

6050 மிமீ விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மற்றும் 3டி கரவ்ட் டிசைனில் 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. வீகன் லெதர் பேக் பேனல் மட்டுமல்லாமல், மொத்தமாக IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. லைட்-சென்சிங் பேனல் கொண்ட குளோயிங் லூனார் ஒயிட் (Glowing Lunar White) கலரும் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார், ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி, 4K ரெக்கார்டிங் பீச்சர்கள் உள்ளன.
6000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.38 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ பீச்சர்கள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P3 Ultra 5G With 50MP Camera Available At Rs 18999 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X