Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் கோட் சேல் 2026 (GOAT Sale 2026) என்னும் சிறப்பு விற்பனை வருகிற ஜூலை 4ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விற்பனைக்கு முன்னதாக நடக்கும் எர்லி பேர்டு விற்பனையில் (Early Bird Sale) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்ட ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (Realme P3 Ultra 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 22 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.24,999 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.23,499 விலைக்கு இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்ய முடியும்.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி!

டைமன்சிட்டி 8350 அல்ட்ரா 5ஜி சிப்செட்டுடன் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கிறது. 7.38 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் பாடியில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. 1.5K குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்896 சென்சாருடன் மெயின் கேமரா கிடைக்கிறது. 6000mAh டைட்டன் பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Realme P3 Ultra 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. குவாட் கர்வ்ட் மாடலாக இருப்பதால், பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் கிடைக்கும்.

இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதுபோக 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் சப்போர்ட் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது.

மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

மேலும், ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) வருகிறது. சூப்பர் லீனியர் டூயல் ஸ்பீக்கர்கள் (Super Linear Dual Speakers), ஓரியாலிட்டி ஆடியோ (OReality Audio) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சர்டிபிகேஷனை (Hi-Res Audio Certification) கொடுத்துள்ளது. ஆகவே, ஆடியோவிலும் பிரீமியம் குவாலிட்டி எதிர்பார்க்கலாம். மேலும், நாய்ஸ் கேன்லசேஷன் கொண்ட டூயல்-மைக் கொடுக்கப்பட்டு உள்ளது.

50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை பேக் செய்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமராவை இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது. பிரீமியம் டியூரபிலிட்டி கொடுக்க IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. நெப்டியூன் ப்ளூ (Neptune Blue) மற்றும் ஓரியன் ரெட் (Orion Red) ஆகிய கலர் வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme P3 Ultra 5G is Available Discounted Price in Flipkart Here is Early Bird Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X