Home
Mobile

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.4,000 விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இதனால் முந்தைய மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.4,000 விலை குறைப்பில் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (Realme P3 Ultra 5G) கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.22,999 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, நேரடியாக ரூ.4,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,150 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, 21,849 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.4,000 விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி.. மாடல்?

ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (realme P3 Ultra 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் வருகிறது.

மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்டை கொடுத்துள்ளது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசி டிம்மிங் மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுக்காப்பு உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் உள்ளது.

80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைத்துள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கொடுத்துள்ளது.

நெப்டியூன் ப்ளூ (Neptune Blue) மற்றும் ஓரியன் ரெட் (Orion Red) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போனை பார்க்கையில், 10001mAh பேட்டரியை கொடுக்க உள்ளது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங் மற்றும் பூஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைத்துள்ளது. மேலும், 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் மற்றும் ஹைப்பர் விஷன்+ ஏஐ சிப் கிடைத்துள்ளது. 90FPS கேமிங் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. கேமராவில் ஏஐ ஹைப்பர் கிளாரிட்டி, ஏஐ ஹைப்பர் மோஷன், ஏஐ ஆல்வேஸ் ஆன் எச்டிஆர் சப்போர்ட் கிடைக்கிறது. 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 டிஸ்பிளே பீச்சர்களை கொடுக்க உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme P3 Ultra 5G Gets Rs 4000 Price Cut Ahead Of Realme P4 Power 5G Launch in India Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X