மார்ச் 19 வரை பொறுங்க.. புது Realme போன்.. 5ஜி, 50MP சோனி கேமரா, 6000mAh பேட்டரி, 80W சார்ஜிங், IP69 ரேட்டிங்!
மிகவும் சமீபத்தில் விவோ நிறுவனம் அறிமுகம் செய்த விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4X 5G) ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக, ரியல்மி நிறுவனம் வருகிற மார்ச் 19 ஆம் தேதியன்று அதன் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (Realme P3 Ultra 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?
ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Realme P3 Ultra 5G Expected Specifications)?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.83 இன்ச் 1.5K AMOLED மைக்ரோ கர்வ்டு டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்
- LPDDR5x ரேம்
- UFS 3.1 ஸ்டோரேஜ்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50MP சோனி IMX 896 ப்ரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
- 4K 60fps வீடியோ ரெக்கார்ட் ஆதரவு
- கேமராவில் சில AI அம்சங்களுக்கான ஆதரவு
- 16MP செல்பீ கேமரா
- பெரிய 6000mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- 7.38 மிமீ தடிமன் மற்றும் 183 கிராம் எடை உடன் மிக ஸ்லிம் ஆன டிசைனை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (Realme P3 Ultra 5G Expected Price in India)? விலையை பொறுத்தவரை, ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது வெளியீட்டு சலுகைகளுடன் கூடிய விலை நிர்ணயமாக இருக்குமா அல்லது ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் ரீடெயில் விலையாக இருக்குமா என்பதை ரியல்மி நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை.
விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மெரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் ப்ரோடான் பர்பிள் (Proton Purple) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிற பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பிளாஸ்டிக் பாடி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- லைவ் டெக்ஸ்ட், சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள்
- டூயல் கேமரா செட்டப்
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- 8எம்பி செல்பீ கேமரா
- ஏஐ ஏரேசர் உட்பட பல ஏஐ கேமரா அம்சங்கள்
- 30 fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்
- பெரிய 6,500mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு.


Click it and Unblock the Notifications








