SALE பிச்சிக்குது.. ரூ.4,000 ரேட் கட்.. 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போடும்படியான லிமிடெட்-டைம் ஆஃபரில் ரியல்மி பி3 சீரிஸ் (Realme P3 Series) மாடல்கள் கிடைக்கின்றன. இதில் ரியல்மி பி3 5ஜி, ரியல்மி பி3 ப்ரோ 5ஜி, ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி மற்றும் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி மாடல்கள் இருக்கின்றன. ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும்.
ரியல்மி பி3 5ஜி அம்சங்கள், விலை (Realme P3 5G Specifications Price): இந்த போனில் 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 2000 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4என்எம் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ரியல்மி யுஐ 6.0 மற்றும் அட்ரினோ 810 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரியின் விலை ரூ.16,999ஆக உள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் உள்ளது. இந்த விலையில் ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,499 ஆரம்ப விலையில் இந்த ரியல்மி பி3 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.
ரியல்மி பி3 ப்ரோ 5ஜி அம்சங்கள், விலை (Realme P3 Pro 5G Specifications Price): இந்த ப்ரோ மாடலில் 6.83 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் சிப்செட், அட்ரினோ 720 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ரியல்மி யுஐ 6.0 கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்896 + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் (சோனி ஐஎம்எக்ஸ்480 சென்சார்) வருகிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
80W சார்ஜிங், 6000mAh பேட்டரி மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது.
இந்த மூன்று வேரியண்ட்களுக்கும் ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போனை ரூ.19,999 ஆரம்ப விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். வேகன் லெதர் பேனலுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. விசி கூலிங் சிஸ்டம் மற்றும் ஏஐ கேமரா பீச்சர்களை கொண்டிருக்கிறது.
ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள், விலை (Realme P3 Ultra 5G Specifications Price): இந்த அல்ட்ரா போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
மேலும், 1500 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 4nm) சிப்செட், மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ 6.0 கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவானது சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சாருடன் வருகிறது.
ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி போனிலும் IP66 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
80W சூப்பர்வூக் சார்ஜிங், 6000mAh பேட்டரி இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது. இப்போது ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் & 6 மாதங்களுக்கான நோகாஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி அம்சங்கள், விலை (Realme P3x 5G Specifications Price): இந்த போனில் 6.72 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ரியல்மி யுஐ 6.0 மற்றும் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த போன் கொடுக்கிறது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளது. 6000mAh பேட்டரியும், 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கும் கிடைக்கிறது.
இந்த பி3எக்ஸ் போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ரூ.1000 டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 ஆரம்ப விலையில் இந்த ரியல்மி பி3எக்ஸ் போனை ஆர்டர் செய்யலாம். இவை லிமிடெட் டைம் ஆஃபராகும்.


Click it and Unblock the Notifications








