Home
Mobile

ஏப்.24 க்குள் வாங்கினால் ரூ.4000 வரை டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி கொண்ட 2 Realme போன்கள் மீது திடீர் ஆபர்!

ரியல்மி (Realme) நிறுவனம் புதிய சிறப்பு விற்பனை ஒன்றை அறிவித்து அதன் கீழ் 2 ஸ்மார்ட்போன்களை ஆபர் விலையில் விற்பனை செய்கிறது. ரியல்மி பி கார்னிவல் (Realme P Carnival) என்கிற விற்பனையின் கீழ், ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி பி3 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது.

இவ்விரு ஸ்மார்ட்போன்கள் மீதும் பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் மூலம் ரூ.4,000 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் ரியல்மி பி3 சீரீஸின் கீழ் ரியல்மி பி3 (Realme P3) மற்றும் ரியல்மி பி3 ப்ரோ (Realme P3 Pro) என்கிற 2 மாடல்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகமானது. குறிப்பாக ப்ரோ வேரியண்ட் ஆனது "இந்தியாவின் முதல் க்ளோ இன் தி டார்க் டிசைன்" ஸ்மார்ட்போன் ஆகும்.

6000mAh பேட்டரி கொண்ட 2 Realme போன்கள் மீது திடீர் ஆபர்!

ரியல்மி பி கார்னிவல் விற்பனையின் கீழ் ரியல்மி பி3 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் ஆபர்கள்: ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.23,999 என்கிற தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரியல்மி பி கார்னிவல் விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,999 என்கிற தொடக்க விலையில் (சலுகைகள் உட்பட) வாங்க கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ரூ.4,000 அல்லது ரூ.3,000 வரையிலான வங்கி சலுகைகளைப் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் நெபுலா க்ளோ, கேலக்ஸி பர்பிள் மற்றும் சாட்டர்ன் பிரவுன் (Nebula Glow, Galaxy Purple, Saturn Brown) ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.

மறுகையில் உள்ள ரியல்மி பி3 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 (சலுகைகள் உட்பட) என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும்.

இந்த விற்பனையின் போது, ​​6ஜிபி ரேம் / 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.1,000 வங்கி தள்ளுபடியும், 8ஜிபி ரேம் / 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் 8ஜிபி ரேம் / 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீது ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் சில்வர், நெபுலா பிங்க் மற்றும் காமெட் கிரே ( Space Silver, Nebula Pink, Comet Grey) ஆகிய நிறங்களில் வாங்க கிடைக்கிறது.

ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ள இந்த பி கார்னிவல் விற்பனை ஆனது ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி பி3 ப்ரோ மற்றும் ரியல்மி பி3 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளை பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி வலைத்தளம் மற்றும் ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக பெறலாம்.

ரியல்மி பி3 ப்ரோ மற்றும் ரியல்மி பி3 ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: வெண்ணிலா வேரியண்ட் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. ப்ரோ வேரியண்ட் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5கே குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. வெண்ணிலா வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் உள்ளது. இரண்டுமே ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ரியல்மி யுஐ 6 அவுட் ஆப் பாக்ஸ் உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை ப்ரோ மாடலில் 50எம்பி சோனி IMX896 OIS கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை லென்ஸ் உள்ளது; முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா உள்ளது.

மறுகையில் உள்ள ரியல்மி பி3 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் உள்ளது. செல்பீக்களுக்காக 16எம்பி கேமரா உள்ளது. கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி பி3 மற்றும் ரியல்மி பி3 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Realme P3 Realme P3 Pro gets up to Rs 4000 discount in Realme P Carnival sale Ends April 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X