Home
Mobile

Flipkart-ல் ஆர்டர் அள்ளுது.. ரூ.3000 நேரடி விலை குறைப்பு.. 80W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா!

ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று, ரியல்மி (Realme) நிறுவனம் அதன் ரியல்மி பி4 (Realme P4) மற்றும் ரியல்மி பி4 ப்ரோ (Realme P4 Pro) ஆகிய 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதை அறிவித்த வேகத்தில்.. பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரியல்மி பி3 (Realme P3) மற்றும் ரியல்மி பி3 ப்ரோ (Realme P3 Pro) ஆகிய இரண்டுமே திடீர் விலை குறைப்பை பெற்றுள்ளன.

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,999 என்கிற தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.20,999 க்கு பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது. இது எந்த வங்கி சலுகையும், கூப்பன் தள்ளுபடியும் இல்லாத நேரடி விலை குறைப்பாகும்.

Flipkart-ல் ஆர்டர் அள்ளுது.. ரூ.3000 நேரடி விலை குறைப்பு!

சுவாரசியமாக பிளிப்காட் வழங்கும் இந்த ரூ.3000 நேரடி விலை குறைப்பு ஆனது ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அனைத்து கலர் ஆப்ஷன்கள் மீதும் கிடைக்கிறது. அதாவது நெபுலா க்ளோ, கேலக்ஸி பர்பிள் மற்றும் சாட்டர்ன் பிரவுன் (Nebula Glow, Galaxy Purple, Saturn Brown) ஆகிய 3 கலர்களில் கிடைக்கிறது.

இதேபோல, மறுகையில் உள்ள ரியல்மி பி3 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.15,999 க்கு பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது. இது எந்த வங்கி சலுகையும், கூப்பன் தள்ளுபடியும் இல்லாத நேரடி விலை குறைப்பாகும்.

ப்ரோ மாடலை போலவே பிளிப்காட் வழங்கும் இந்த ரூ.1000 நேரடி விலை குறைப்பு ஆனது ரியல்மி பி3 ஸ்மார்ட்போனின் அனைத்து கலர் ஆப்ஷன்கள் மீதும் கிடைக்கிறது. அதாவது காமெட் க்ரே, நெபுலா பிங்க் மற்றும் ஸ்பேஸ் சில்வர் (Comet Gray, Nebula Pink, Space Silver) ஆகிய 3 கலர்களில் கிடைக்கிறது.

ரியல்மி பி3 ப்ரோ மற்றும் ரியல்மி பி3 ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: வெண்ணிலா வேரியண்ட் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. ப்ரோ வேரியண்ட் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5கே குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. வெண்ணிலா வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் உள்ளது. இரண்டுமே ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ரியல்மி யுஐ 6 அவுட் ஆப் பாக்ஸ் உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை ப்ரோ மாடலில் 50எம்பி சோனி IMX896 OIS கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை லென்ஸ் உள்ளது; முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா உள்ளது.

மறுகையில் உள்ள ரியல்மி பி3 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் உள்ளது. செல்பீக்களுக்காக 16எம்பி கேமரா உள்ளது. கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி பி3 மற்றும் ரியல்மி பி3 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளன.

ரியல்மி பி4 சீரீஸ் என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் ரியல்மி பி4 சீரீஸின் விலை ரூ.30,000 க்கும் குறைவாக இருக்கும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி பி3, ரியல்மி பி3 ப்ரோ மற்றும் ரியல்மி பி3 அல்ட்ரா ஆகிய மாடல்களை போலவே இந்த சீரீஸின் கீழும் ரியல்மி பி4, ரியல்மி பி4 ப்ரோ மற்றும் ரியல்மி பி4 அல்ட்ரா என 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P3 Realme P3 Pro gets Price get in Flipkart Ahead Realme P4 Series India Launch on Aug 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X