Home
Mobile

பிப்.18 வர்றாரு.. QUAD டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. VC கூலிங்.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் கேமிங் பிரியர்களுக்கு பக்காவான அவுட்புட் கொடுக்கும்படியான சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களுடன் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பி3 ப்ரோ (Realme P3 Pro) வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதியுடன் பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த போனில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்க இருக்கிறது? எப்போது வெளியாகிறது? விற்பனை எப்படி? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இதுவொரு பிரத்யேக கேமிங் மாடலாக இருப்பதால் ரியல்மி நிறுவனம் பிஜிஎம்ஐ இந்தியா சிரீஸ் 2025 (BGMI India Series 2025) உடன் கோர்த்துள்ளது. இதற்கு ஏற்ப ஸ்டேபிள் பர்ஃபாமென்ஸ், ஹை ஃபிரேம் ரேட், ஆப்டிமைஸ் டிவைஸ் டெம்ப்ரேச்சர், சீம்லெஸ் டச் அக்கியூரசி போன்றவற்றை இந்த ரியல்மி பி3 ப்ரோ போனில் எதிர்பார்க்கலாம். பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பிப்.18 வர்றாரு.. QUAD டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. VC கூலிங் மாடல்!

இதை ரியல்மி இந்திய நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த ரியல்மி பி3 ப்ரோ போனில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட் வர இருப்பதையும் உறுதி செய்துள்ளது. இது செக்மெண்ட் ஃபர்ஸ்ட் சிப்செட்டாக இருக்கும் என்று ரியல்மி நிறுவனம தெரிவிக்கிறது. ஆகவே, இந்த போனை மிட்-ரேஞ்சை விட கம்மியான பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

இதுபோக விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. அதேபோல குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Cuverd Display) வர இருப்பதையும் ரியல்மி நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. மேலும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இந்த ரியல்மி பி3 ப்ரோ போன் விற்பனைக்கு வருவதும் உறுதியாகிவிட்டது.

இதுபோக ஜிடி பூஸ்ட் டெக்னாலஜி (GT Boost Technology) வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டெக்னாலஜி மூலம் கேமிங் பிரியர்களுக்கு ஏஐ அல்ட்ரா-ஸ்டெடி ஃபிரேம் (AI Ultra Steady Frame), ஹைப்பர் ரெஸ்பான்ஸ் என்ஜின் (Hyper Response Engine), ஏஐ அல்ட்ரா டச் கன்ட்ரோல் (AI Ultra Touch Control) மற்றும் ஏஐ மோஷன் கன்ட்ரோல் (AI Motion Control) ஆகிய சப்போர்ட் எதிர்பார்க்கலாம்.

மேற்கண்ட பீச்சர்களை தவிர மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆகவே, பிப்ரவரி 18ஆம் தேதியிலேயே முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். இருப்பினும், ரியல்மி பி3 ப்ரோ போனின் ரேம், கேமரா, ஓஎஸ் போன்ற சில பீச்சர்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி பி3 ப்ரோ அம்சங்கள் (Realme P3 Pro Specifications): இந்த ரியல்மி போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. இதில் ஏஐ கேமரா பீச்சர்களும் இடம்பெற வாய்ப்புள்ளது. மூன்று வேரியண்ட்களில் வர இருக்கிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. இந்த ரியல்மி பி3 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.25,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P3 Pro With 6000mAh Battery To Launch on February 18 Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X