பிப்ரவரி 18 உறுதி.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் புது Realme போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி பி3 ப்ரோ (Realme P3 Pro) ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் வலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் இந்த புதிய ரியல்மி போன் ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலு குவாட்-கர்வ்டு எட்ஜ்ஃப்ளோ டிஸ்ப்ளே வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில கசிந்த ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி பி3 ப்ரோ அம்சங்கள் (Realme P3 Pro Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக 20% மேம்பட்ட CPU செயல்திறன் மற்றும் 40% GPU செயல்திறன் வழங்குகிறது இந்த போன். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
குவாட்-கர்வ்டு எட்ஜ்ஃப்ளோ டிஸ்ப்ளே ( Quad-Curved EdgeFlow Display) வசதியுடன் ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெபுலா க்ளோ (Nebula Glow), சாட்டர்ன் பிரவுன் ( Saturn Brown) மற்றும் கேலக்ஸி பர்பிள் (Galaxy Purple) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ஏரோஸ்பேஸ் VC கூலிங் சிஸ்டம் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் மேம்பட்ட கேமிங் அம்சங்கள் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன. எனவே கேமிங் பயனர்கள் ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
6000mAh பேட்டரி உடன் ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

OIS ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த ரியல்மி போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி பி3 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant),5ஜி, வைஃபை, யுஎஸ்பி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ரியல்மி போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications







