விட்ராதீங்க சார்.. ரூ.21999 பட்ஜெட்ல QUAD டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
குவாட் கர்வ்ட் எட்ஜ் டிஸ்பிளே, ஏரோஸ்பேஸ் விசி கூலிங் சிஸ்டம், 6000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா மட்டுமல்லாமல் பிரீமியம் நெபுளா டிசைனில் மார்கெட்டில் களமிறங்கிய ரியல்மி பி3 ப்ரோ 5ஜி (Realme P3 Pro 5G) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. ரூ.2,000 டிஸ்கவுண்ட், நோ-காஸ்ட் ஈஎம்ஐ போன்ற சலுகைகளுடன் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கும் இந்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
ரியல்மி பி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P3 Pro 5G Specifications): இந்த ரியல்மி போனில் குவாட் கர்வ்ட் எட்ஜ் டிசைனில் (QUAD Curved Edge Design) மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

மேலும், 1 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஸ்மார்ட்-ஆன்டி மிஸ் டச் (Smart-anti Miss Touch) மற்றும் வெட் ஹேண்ட் டச் கன்ட்ரோல் (Wet Hand Touch Control) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போனில் 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஏஐ ஸ்மார்ட் சார்ஜிங் (AI Smart Charging) சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரிக்கு பைபாஸ் சார்ஜிங் (BYBASS Charging) மற்றும் பேட்டரி ஹீட் கன்ட்ரோல் கொடுக்க ஏரோஸ்பேஸ் விசி கூலிங் சிஸ்டம் (AeroSpace VC Cooling System) சப்போர்ட் உள்ளது. அண்டர் வாட்டர் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி கொடுப்பதற்காக IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்படுகிறது. சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சாருடன் 50 எம்பி ரியர் கேமரா வருகிறது.
இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டரில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கிடைக்கிறது. லைவ் போட்டோ (LIVE Photo) மற்றும் அண்டர் வாட்டர் மோட் (Under Water Mode) போன்ற பிரத்யேக போட்டோகிராபி பீச்சர்கள் கிடைக்கின்றன.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது. ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
மேலும், ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.21,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போனை நெபுளா க்ளோவ் (Nebula Glow), கேலக்ஸி பர்பிள் (Galaxy Purple) மற்றும் ஸ்டார்ன் பிரவுண் (Saturn Brown) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications







