Home
Mobile

SALE பிச்சிக்கும்.. ரூ.21999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி (Realme P3 Pro 5G) போனானது பட்ஜெட்டில் வெளியாகி திக்குமுக்காட செய்துள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கேமரா, 6000mAh பேட்டரி, 80W சார்ஜிங் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேனல் டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போனின் முழு பீச்சர்கள், விற்பனை தேதி மற்றும் விலை விவரங்கள் இதோ.

ரியல்மி பி3 ப்ரோ 5ஜி விலை (Realme P3 Pro 5G Price): இந்த ரியல்மியின் 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும், 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 ஆகவும் இருக்கிறது. மேலும், 12ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. ஆனால், அறிமுக சலுகையில் மலிவாக கிடைக்க இருக்கிறது.

SALE பிச்சிக்கும்.. ரூ.21999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

ஆகவே, ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.21,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதுபோக ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகளும் இந்த மாடல்களுக்கு கிடைக்க இருக்கின்றன. பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ரியல்மி பி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P3 Pro 5G Specifications): இந்த ரியல்மி போனில் சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது. இந்த கேமராவில் ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode), லைவ் போட்டோ (LIVE Photo) பீச்சர்கள் உள்ளன.

மேலும், அண்டர் வாட்டர் மோட் (Under Water Mode) கிடைக்கிறது. ஆகவே, IP69 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) 3டி கவ்ர்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஸ்மார்ட்-ஆன்டி மிஸ் டச் சப்போர்ட் உள்ளது.

SALE பிச்சிக்கும்.. ரூ.21999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

அதேபோல வெட் ஹேண்ட் டச் கன்ட்ரோல் (Wet Hand Touch Control) கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 2500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஏஐ பீச்சர்களை கொடுக்கும்படி ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. ஆகவே, ஏஐ மோஷன் கன்ட்ரோல் வருகிறது.

அதேபோல ஏஐ அல்ட்ரா டச் கன்ட்ரோல் (AI Ultra Touch Control) கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போனில் IP66 + IP68 ரெசிஸ்டன்ட் பெற்று கொள்ளலாம். 6000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. பெரிய பேட்டரி இருந்தும், 7.99 எம்எம் பாடி மட்டுமே கொண்டிருக்கிறது. 199 கிராம் எடை எதிர்பார்க்க முடிகிறது.

மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போனை நெபுளா க்ளோவ் (Nebula Glow), கேலக்ஸி பர்பிள் (Galaxy Purple) மற்றும் ஸ்டார்ன் பிரவுண் (Saturn Brown) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Realme P3 Pro 5G With 50MP Camera Launched Sale From February 25 in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X