வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்..
பிளிப்கார்ட் தளத்தில் இப்போது பிளிப்கார்ட் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Great Republic Day Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான ரியல்மி பி3 ப்ரோ 5ஜி (Realme P3 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

ரியல்மி பி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P3 Pro 5G Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2800 x 1272 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
1 பில்லியன் கலர் டெப்த், ஸ்மார்ட்-ஆன்டி மிஸ் டச் (Smart-anti Miss Touch), வெட் ஹேண்ட் டச் கன்ட்ரோல் (Wet Hand Touch Control) போன்ற பல அம்சங்கள் இந்த ரியல்மி போனின் டிஸ்பிளேவில் உள்ளன. ஆகவே இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் உடன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஏரோஸ்பேஸ் விசி கூலிங் சிஸ்டம் (AeroSpace VC Cooling System) சப்போர்ட் இந்த அட்டகாசமான ரியல்மி போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6000mAh பேட்டரி வசதியுடன் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஏஐ ஸ்மார்ட் சார்ஜிங் (AI Smart Charging) சப்போர்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications








