அடிச்சு தூக்குது ஆர்டர்.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 32MP கேமரா.. ஆஃபரில் Realme 5G போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட ரியல்மி பி3 லைட் 5ஜி (Realme P3 Lite 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங், 32 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது. இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்கவுண்ட் விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 7 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.11,999 பட்ஜெட்டில் இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி பி3 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P3 Lite 5G Specifications): 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் டச் சாம்பிளிங் ரேட் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.
16.7 மில்லியன் கலர் டெப்த் இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்துள்ளது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) வருகிறது.
32 எம்பி மெயின் கேமரா + கேலக்ஸிகோர் ஜிசி32இ2 (GALAXYCORE GC32E2) சென்சார் கிடைத்துள்ளது. மேலும, செல்பீ மற்றும் வாய்ஸ் கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு டூயல் வியூ வீடியோ (Dual-view Video) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், நைட் (Night), போர்ட்ராய்டு (Portrait), ஹைடெபனிஷன் (HighDefinition) போன்ற மோட்கள் உள்ளன.
ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் டைம்-லேப்ஸ் (Time-lapse) உள்ளது. மேலும், ஸ்ட்ரீட் மோட் (Street Mode) மற்றும் பனோரமா மோட் (Panorama Mode) கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. இந்த மலிவு விலையிலும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கிடைத்துள்ளது. 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி உள்ளது.
5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி உள்ளது. பர்பிள் பிளாசம் (Purple Blossom), மிட்நைட் லில்லி (Midnight Lily) மற்றும் லில்லி ஒயிட் (Lily White) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








