Home
Mobile

தீபாவளிக்கு மொத்த ஆர்டரும் விழுது.. ரூ.8,644 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

தீபாவளிக்கு பண்டிகைக்கு முன்னதாக பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி பி3 லைட் 5ஜி (Realme P3 Lite 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு புரொடெக்சன், கேலக்ஸிகோர் சென்சார் கேமரா மற்றும் IP64 ரேட்டிங் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் கொண்ட இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்கள் இதோ.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.10,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.11,499ஆகவும் இருக்கிறது. ஆனால், இப்போது, பிளிகார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.9,099 பட்ஜெட்டிலும், 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.10,499 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது.

தீபாவளிக்கு மொத்த ஆர்டரும் விழுது.. ரூ.8,644 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி!

இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.455 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,644 ஆரம்ப விலையில் வாங்கி கொள்ளலாம். 6 ஜிபி ரேம் வேரியண்ட்டுக்கு ரூ.525 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, அந்த வேரியண்ட்டை ரூ.9,974 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன.

ரியல்மி பி3 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P3 Lite 5G Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இதுவொரு லேட்டஸ்ட் மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மாடலில் 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது.

இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிரீமியம் மாடல்களுக்கு நிகரான பில்ட் குவாலிட்டி கிடைக்கிறது. ஏனென்றால், மிலிட்டரி கிரேடு ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனை பெற்றுள்ளது. இந்த ரெசிஸ்டன்ஸ் மட்டுமல்லாமல், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water resistant) வருகிறது.

இந்த பில்ட் குவாலிட்டியுடன் பிரீமியம் லுக் விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ப பர்பிள் பிளாசம் (Purple Blossom), மிட்நைட் லில்லி (Midnight Lily) மற்றும் லில்லி ஒயிட் (Lily White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 32 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது. மெயின் கேமராவில் கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 சென்சார் உள்ளது.

8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. இந்த கேமராவில் நைட் மோட் (Night Mode), ப்ரோபஷ்னல் மோட் (Professional Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) போன்ற பக்கா பீச்சர்கள் மற்றும் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom ported Speaker) வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P3 Lite 5G With 6GB RAM Available At Discounted Price in Flipkart Offer Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X