Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.12000 கூட இல்ல.. 6000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் சிறப்பு விற்பனையில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் கிடைக்காத தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கின்றன. இதில் 12 ஜிபி ரேம், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கொண்ட ரியல்மி பி3 லைட் 5ஜி (Realme P3 Lite 5G) ஸ்மார்ட்போன் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 17 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.11,499 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக குறிப்பிட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.575 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,924 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.12000 கூட இல்ல.. 6000mAh பேட்டரி!

ரியல்மி பி3 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P3 Lite 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டுடன் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுத்துள்ளது.

6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கொடுத்ததை போலவே, 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், அதற்கு பிறகு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் கொடுக்கப்பட்டதை போலவே கூடுதலாக எஸ்டி கார்டு சிலாட் கிடைத்துள்ளது. டூயல் ரியர் செட்டப் கொண்ட பிரைமரி கேமரா கிடைக்கிறது.

ஆனால், பார்ப்பதற்கு டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் போல இருக்கும். 32 எம்பிக்கான பிரைமரி கேமராவானது, கேலக்ஸிகோர் ஜிசி32இ2 (GALAXYCORE GC32E2) சென்சார் கிடைக்கிறது. கூடுதலாக ஒரு லென்ஸ் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுககு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 7.94 எம்எம் தடிமன் கொண்ட பாடியில் 6000mAh பேட்டரியை கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, மலிவான பட்ஜெட்டில் பக்கா பேட்டரி மட்டுமல்லாமல், ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்துள்ளது.

டியூரபிலிட்டியில் பட்டையை கிளப்பும்படி இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் வழக்கமாக எதிர்பார்க்கும்படியான IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மட்டுமல்லாமல், MIL-STD 810H ரேட்டிங் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுத்துள்ளது. மற்ற பீச்சர்களும் பக்காவாக இருக்கின்றன.

ஆகவே, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், 5ஜி மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி, ப்ளூடூத் 5.3 மற்றும் வை-பை 802 .11 சப்போர்ட் கொடுக்கிரது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.

பர்பிள் பிளாசம் (Purple Blossom), மிட்நைட் லில்லி (Midnight Lily) மற்றும் லில்லி ஒயிட் (Lily White) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன் பிரீமியம் லுக் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது. குறிப்பாக 7.94 எம்எம் தடிமன் தட்டித் தூக்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P3 Lite 5G With 6GB RAM Available At 17 Percent Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X