Home
Mobile

மொத்த சாம்ராஜ்யம் இத பாத்து.. ரூ.9499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. புது Realme போன்.. எந்த மாடல்?

ரியல்மி (Realme) நிறுவனமானது, அதனுடை புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரியல்மி பி3 லைட் 5ஜி (Realme P3 Lite 5G) மாடலை இந்திய மார்கெட்டில் களமிறக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், கேலக்ஸிகோர் சென்சார் கேமரா மற்றும் IP64 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.

ரியல்மி பி3 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P3 Lite 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

மொத்த சாம்ராஜ்யம் இத பாத்து.. ரூ.9499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி மாடல்!

ரியல்மியின் லேட்டஸ்ட் பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) இதில் கிடைக்கிறது. 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 16.7 கலர் டெப்த் உள்ளது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GALAXYCORE GC32E2) சென்சார் கொண்ட 32 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் போட்டோ மோட் (Photo Mode), வீடியோ மோட் (Video Mode), நைட் மோட் (Night Mode) உள்ளது.

ப்ரோபஷ்னல் மோட் (Professional Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஹைடெபனிஷன் மோட் (HighDefinition Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இதிலும் நைட் மோட் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

மொத்த சாம்ராஜ்யம் இத பாத்து.. ரூ.9499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி மாடல்!

அதேபோல 720p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water resistant) கொடுக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது.

ஆகவே, எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனை கொடுக்கிறது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கொடுத்து இருக்கிறது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) போன்ற மற்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. பிரீமியம் லுக்கில் பர்பிள் பிளாசம் (Purple Blossom), மிட்நைட் லில்லி (Midnight Lily) மற்றும் லில்லி ஒயிட் (Lily White) கலர்கள் உள்ளன.

இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,499ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆக இருக்கிறது. ரூ.1,000 அறிமுக சலுகை போக ரூ.9,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme P3 Lite 5G With 6000mAh Battery Launched in India Sale From Sep 22nd Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X