பொங்கல் ஆர்டர் பொளக்குது.. ரூ.11,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி 5ஜி போன்.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போது, பொங்கல் பண்டிகை வந்துள்ளதால், ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை அதிகமாக இருக்கிறது. 6000mAh பேட்டரியுடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 120 Hz டிஸ்பிளேவை கொடுத்துள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 7 சதவீத தள்ளுபடியுடன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.11,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.600 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,399 விலைக்கு இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி பி3 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P3 Lite 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைத்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.
ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைத்துள்ளது. ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் கிடைத்துள்ளது. இதில் டூயல் நானோ சிம் மற்றும் 2 டிபிக்கான மைக்ரேஎஸ்டி பயன்படுத்தலாம். மேலும், 4 ஜிபி ரேம் போக கூடுதலாக 4 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.
6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கிடைத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ளது. மேலும், 180 Hz டச் சாம்பிளிங் ரேட், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த்தை கொடுத்துள்ளது.
32 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. மெயின் கேமராவில் கேலக்ஸிகோர் ஜிசி32இ2 சென்சார் கிடைத்துள்ளது. போட்டோ மோட் (Photo Mode), வீடியோ மோட் (Video Mode), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஹைடெபனிஷன் மோட் (HighDefinition Mode) மற்றும் ஸ்ட்ரீட் மோட் (Street Mode) உள்ளது.
மேலும், பனோரமா மோட் (Panorama), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம்-லேப்ஸ் (Time-lapse) மற்றும் டூயல் வியூ வடியோ (Dual-view Video) பீச்சர்களும் கிடைக்கின்றன. 45Wஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் 45W சார்ஜிங் அடாப்டர் கொடுக்கப்படும். யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) சப்போர்ட் கிடைத்துள்ளது.
7.94 எம்எம் தடிமன் மற்றும் 197 கிராம் எடையை இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைத்துள்ளது. மேலும், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) கொடுத்துள்ளது.
மேலும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker) கிடைத்துள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது. பர்பிள் பிளாசம், மிட்நைட் லில்லி மற்றும் லில்லி ஒயிட் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








