மார்கெட் காலி.. மட்ட ரேட்ல Realme 5ஜி போன்.. பிளிப்கார்ட் Black Friday சேல்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிளாக் ஃப்ரைடே சேலில் (Black Friday Sale) ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இதில் 6000mAh பேட்டரியுடன் 5ஜி மாடலாக வெளியான ரியல்மி பி3 லைட் 5ஜி (Realme P3 Lite 5G) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத கம்மி விலைக்கு கிடைக்கிறது.
இந்த பிளாக் ஃப்ரைடே சேலில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் 23 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.9,999 விலைக்கு கிடைக்கிறது. கூடுதலாக, குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி போனை வாங்கி கொள்ள முடியும்.

ரியல்மி பி3 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P3 Lite 5G Specifications): எச்டி பிளஸ், 720 x 1604 பிக்சல்கள் ரெசொலுஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 6.67 இன்ச் எல்சிடி டிஸ்பிளே இணைக்கப்பட்டுள்ளது. 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றன.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் என்னும் தரமான சிப்செட்டை இந்த விவோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வந்துள்ளது. அதேபோல ரியல்மி யுஐ 6.0 கொண்டிருக்கிறது. இதன் மூலம் யுஐ தரமாக இருக்கும். 32 மெகா பிக்சல் கேமராவை கொடுத்துள்ளது. இதில் கேலக்ஸிகோர் சென்சாரும் கொடுக்கப்படுகிறது.
8 மெகாபிக்சல் ப்ரன்ட் கேமராவை இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். 1 நாள் முழுவதும் பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதை உடனடியாக சார்ஜ் செய்து கொள்ளும்பட 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த ரியல்மி போன் கொடுக்கிறது.
IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. தரமான ஸ்மார்ட்போனாக இருக்கும்படி இதில் MIL-STD 810H தர சான்றிதழ் கிடைக்கிறது. இது டிராப் ரெசிஸ்டன்ஸ், ஹாட் வாட்டரில் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ரெசிஸ்டன்ஸை கொடுக்கும் தரமாகும்.
5ஜி, டூயல் 4ஜி வோஎல்டிஈ, வை-பை 802.11 மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டியை இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ உள்ளிட்ட கனெக்டிவிட்டியும் இதில் கிடைத்துள்ளது. பர்பிள் பிளாஸம் (Purple Blossom), மிட்நைட் லில்லி (Midnight Lily) மற்றும் லில்லி ஒயிட் (Lily White) ஆகிய மூன்று கலர்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.
இந்த கலர்களுடன் ஸ்லிம் பாடியை கொண்டுள்ளது. அதாவது, 7.94 எம்எம் தடிமன் மட்டுமே கிடைக்கிறது. அதோடு 197 கிராம் எடை கொடுப்பதால், இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி லைட் வெயிட்டாகவும் இருக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வருகிறது. நான்கு வருடத்துக்கு பேட்டரி ஹெல்த்தை கொண்டுள்ளது.
இதனால் வோல்டேஜ் பாதுகாப்பு, டெம்ப்ரேச்சர் பாதுகாப்பு, பர்ன் பாதுகாப்பு உள்ளிட்ட பேட்டரி அம்சங்களை இது கொடுக்கிறது. மழை காலங்களில் டிஸ்பிளேவை டச் செய்யும்போது நல்ல ரெஸ்பான்ஸ் கொடுக்க ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் கொடுக்கப்படுகிறது. இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications







