அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. மலிவு விலை.. செப்.13-ல் இந்தியாவுக்கு வரும் புது Realme 5ஜி போன்..
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி பி3 லைட் 5ஜி (realme P3 Lite 5G) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரியல்மி பி3 லைட் 5ஜி அம்சங்கள் (realme P3 Lite 5G specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1604 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி 5ஜி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ரியல்மி யுஐ 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
32எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது ரியல்மி பி3 லைட் 5ஜி மாடல். பின்பு MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழ் உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜ வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3இ ஜிபிஎஸ், கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. பர்பிள் ப்ளாசம், மிட்நைட் லில்லி மற்றும் லில்லி ஒயிட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
6000mAh பேட்டரி உடன் ரியல்மி பி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.10,000 பட்ஜெட்டில் இந்த புதிய ரியல்மி பி3 லைட் 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








