Home
Mobile

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.14,999-க்கு வருது 12GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ரியல்மி பிரியர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த விற்பனை தொடங்கிவிட்டது. வெறும் ரூ.14,999 பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 45W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போன்ற பீச்சர்களை கொடுக்கும் ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) போனானது இப்போது ஓப்பன் சேலுக்கு வந்துள்ளது. இந்த ரியல்மி பி3 5ஜி போனின் அறிமுக சலுகை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

டாப்-டயர் வாட்டர் ரெசிஸ்டன் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி3 5ஜி போன் இருக்கிறது. 2.5 மீட்டர்கள் ஆழம் மற்றும் 30 நிமிடங்களுக்கு தாக்குப்பிடிக்க கூடிய IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதுபோக IP68 ரேட்டிங் மற்றும் IP66 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட்டில் பட்ஜெட்டைவிட கூடுதல் பீச்சர்கள் கிடைக்கின்றன.

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.14,999-க்கு வருது 12GB ரேம்.. மாடல்?

அதேபோல ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மூலம் ஏஐ ரெக்கார்டிங் சம்மரி (AI Recording Summary), ஏஐ ஸ்மார்ட் லூப் 2.0 (AI Smart Loop 2.0) மற்றும் சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) போன்ற மல்டி மீடியா பீச்சர்களும் ஏஐ கிளயர் பேஸ் (AI Clear Face), ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode) போன்ற கேமரா பீச்சர்களையும் கொடுக்கிறது. மேலும், ஏஐ அல்ட்ரா டச் கன்ட்ரோல் கிடைக்கிறது.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), ஆண்டெனா அரெய் மேட்ரிக்ஸ் (Antenna Array Matrix), ஸ்பேஸ் டெக்சர்ட் லைன்ஸ் (Space Textured Lines) மற்றும் ஆரஞ்ச் பவர் பட்டன் (Orange Power Button) போன்ற பாடி டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. 7.97 எம்எம் தடிமன் மற்றும் 194 கிராம் எடையில் காம்பாக்ட் டிசைனில் பெரிய பேட்டரி சிஸ்டம் கொடுக்கிறது.

ரியல்மி பி3 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Realme P3 5G Flipkart Sale): இந்த ரியல்மியில் 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ரூ.16,999 பட்ஜெட்டில் வருகிறது. இப்போது, ரூ.2000 டிஸ்கவுண்ட் போக ரூ.14,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதேபோல மற்ற 2 வேரியண்ட்களுக்கும் ரூ.2000 டிஸ்கவுண்ட் வருகிறது.

ஆகவே, ரூ.17,999 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் இப்போது ரூ.15,999 பட்ஜெட்டிலும், ரூ.19,999 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ17,999 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் விற்பனை மார்ச் 28ஆம் தேதி 12 மணி முதல் முடிகிறது. ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டர் செய்யலாம்.

Take a Poll

ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G Specifications): இந்த ரியல்மியில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரியல்மி போனில் 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல் விசி கூலிங் சிஸ்டம் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மூன்று கலர்களில் ஆர்டருக்கு வருகிறது. ஆகவே, காமட் கிரே (Comet Grey), ஸ்பேஸ் சில்வர் (Space Silver) மற்றும் நெபுளா பிங்க் (Nebula Pink) வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P3 5G With 6GB RAM Sale Under Rs 15000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X