Home
Mobile

Realme-யின் 2 லட்டு.. 10001mAh பேட்டரி உடன் புது மாடல்.. 6000mAh 5ஜி போன் மீது விலை குறைப்பு!

இந்திய மொபைல் மார்க்கெட்டிலேயே.. மிகப்பெரிய 10,001mAh பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போன் (10,001mAh Battery Smartphone) வருகிற ஜனவரி 29 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.

(பின் குறிப்பு: அதே ஜனவரி 29 ஆம் தேதிதான் ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது). புதிய பி-சீரிஸ் ஸ்மார்ட்போன் வரும் விளைவாக முன்னதாக வந்த ரியல்மி பி3 சீரீஸ் ஸ்மார்ட்போன் ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அது ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.

Realme.. 6000mAh 5ஜி போன் மீது ரூ.1000 விலை குறைப்பு!

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.1000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 1500 நிட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- ப்ரோ எக்ஸ் டிஆர் (ProXDR) ஆதரவு
- 6.67-இன்ச் அளவிலான AMOLED டிஸ்பிளே
- 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 5ஜி (Snapdragon 6 Gen 4 5G) சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான 6050 மிமீ சதுர ஏரோஸ்பேஸ்-கிரேடு விசி கூலிங் சிஸ்டம்
- ஏஐ அடிப்படையிலான ஜிடி பூஸ்ட் கேமிங் அம்சங்களான ஏஐ மோஷன் கண்ட்ரோல் மற்றும் ஏஐ அல்ட்ரா டச் கண்ட்ரோல்
- 6000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரேட்டிங்

ஒருவேளை நீங்கள் ரியல்மி பி4 5ஜி (Realme P4 5G) மாடலை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட்டில் இது ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் ஹைப்பர் விஷன் சிப்புடன் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட்டால் ஆதரிக்கப்படுகிறது. இது 8GB வரையிலான ரேம், 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது.

ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Android 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. மேலும் இது வெப்ப மேலாண்மைக்காக 7,000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமையும் கொண்டுள்ளது. இதே வீசி கூலிங் சிஸ்டம் ஆனது ப்ரோ வேரியண்ட்டிலும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பல வகையான ஏஐ ஆதரவு அம்சங்களை ஆதரிக்கும் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ எடிட் ஜீனி மற்றும் ஏஐ டிராவல் ஸ்னாப் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. 7.58மிமீ ஸ்லிம் டிசைனை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 7,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P3 5G gets Rs 1000 Price Cut Ahead Realme P4 Power 5G 10001mAh Phone Launch on Jan 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X