நாளை ரூ.2000 ஆஃபர் உடன் விற்பனைக்கு வரும் புதிய Realme 5ஜி போன்.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது நாளை (செப்டம்பர் 26) பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி2 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.24,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புதிய ரியல்மி போனை ரூ.19,999 விலையில் வாங்க முடியும்.

ரியல்மி பி2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P2 Pro 5G Specifications): தரமான ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.
அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2412×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஆனது OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-600 (Sony LTY-600) கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி கேமரா கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி போனில் உள்ளன.

ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14)இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏக்ஸ், ஜிபிஎஸ், க்ளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 180 கிராம் ஆகும். பேரட் கிரீன் (Parrot Green) மற்றும் ஈகிள் கிரே (Eagle Grey) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.
இந்த புதிய ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 5200mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்தியாவில் இந்த புதிய ரியல்மி 5ஜி போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications