Home
Mobile

2 நாள் கேப்புல 2 புதிய போன்கள்.. Realme P2 Pro 5G மற்றும் Realme Narzo 70 Turbo 5G.. என்ன விலை? எதை வாங்கலாம்?

என்னடா இது.. 2024 செப்டம்பர் மாசம் ஆரம்பிச்சு 4 நாள் ஆச்சு.. இன்னமும் எந்த ரியல்மி ஸ்மார்ட்போனும் அறிமுகம் ஆகலேயே.. அட்லீஸ்ட் லான்ச் டேட் கூட அறிவிக்கப்படலயேனு.. யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள.. ரியல்மி நிறுவனம் தனது 2 புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுக தேதிகளை உறுதிப்படுத்தி உள்ளது. அவைகள் - ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme Narzo 70 Turbo 5G) மற்றும் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G) ஸ்மார்ட்போன்கள் ஆகும். எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

சில தினங்களுக்கு முன்பாக தான் ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் செப்டம்பர் 9 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் இன்று, ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Realme P2 Pro 5G மற்றும் Realme Narzo 70 Turbo 5G.. என்ன விலை?

ரியல்மி பி2 ப்ரோ 5ஜி என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இது முன்னதாக அறிமுகமான ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G) ஸ்மார்ட்போனின் அப்கிரேட்ட வெர்ஷன் ஆக வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். வெளியீட்டு தேதியோடு சேர்த்து ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்களும் டீஸ் செய்யபட்டுள்ளது. அதன்படி இது எல்இடி பிளாஷ் உடனான டூயல் கேமரா செட்டப், மெலிதான பெசல்கள், கர்வ்டு டிஸ்பிளே, செல்பீ கேமராவிற்கான சென்டர்டு ஹோல்-பஞ்ச் ஸ்லாட் போன்றவைகளை கொண்டுள்ளது

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். நிறுவனத்தின் கூற்றுப்படி, 5 நிமிட சார்ஜிங் ஒன்றரை மணிநேர கேமிங் டைம்-ஐ வழங்கும். மேலும் இது ஸ்னாப்டிராகன் சிப்செட்டை பேக் செய்வதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சரியான SoC மற்றும் பிற விவரங்கள் செப்டம்பர் 10 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ரியல்மி பி2 ப்ரோ 5ஜி என்ன விலைக்கு வரும்? முன்னதாக அறிமுகமான ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை வைத்து பார்க்கும் போது பெரும்பாலும் இது ரூ.20,000 - ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆப்ஷனைகள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.20,999 க்கு அறிமுகமாகின.

குறிப்பிடத்தக்க வகையில், ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் ரியல்மி பி1 5ஜி வேரியண்ட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று ரியல்மி பி2 ப்ரோ 5ஜி மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்பது போல் தெரிகிறது. ரியல்மி பி2 5ஜி மாடல் குறித்த எந்த விவரங்களையும் ரியல்மி இன்னும் பகிரவில்லை.

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 92.65% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ உடனான 6.67-இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே, 50எம்பி ப்ரைமரி கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட், 5000mAh பேட்டரி மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம்/

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி என்ன விலைக்கு வரும்? இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளதால் பெரும்பாலும் இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும். ஏனென்றால் இதே சிப்செட் கொண்டு இயங்கும் நத்திங் போன் 2ஏ பிளஸ் ஆனது எந்த வங்கி சலுகைகளும் இல்லாமல் ரூ.27,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமானது!

ரியல்மி பி2 ப்ரோ 5ஜி VS ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி - இரண்டில் எதை வாங்கலாம்? இரண்டுமே ரியல்மி நிறுவனத்தின் நம்பர் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அல்ல மற்றும் இரண்டுமே ரூ.25,000 - 30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வருகிறது. ஆக விலை ஒரு தடையாக இல்லாத பட்சத்தில்.. ஒப்பீட்டளவில் பி சீரீஸ் மாடல்களை விட நார்சோ சீரிஸ் ஆனது அதிக எண்ணிக்கையிலான மாடல்களை தன்வசம் கொண்டுள்ளதால்.. ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி மாடலை கருத்தில் கொள்வது நல்லது!

Best Mobiles in India

English summary
Realme P2 Pro 5G to Launch in India on Sep 13 Just After Realme Narzo 70 Turbo 5G Launch on Sep 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X