பிளிப்கார்ட் மிரளுது.. ரூ.18999 போதும்.. 26GB ரேம்.. OLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த போன்?
வெறும் ரூ.18,999 பட்ஜெட்டில் 26 ஜிபி ரேம், ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14, டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் போன்ற பிரீமியம் பீச்சர்களை ரியல்மி பி1 ஸ்பீடு (Realme P1 Speed) போன் கொடுக்கிறது. இந்திய மார்கெட்டில் வெளியாகிய இருக்கும் இந்த ரியல்மி பி1 ஸ்பீடு போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ரூ.20,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 26 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி1 ஸ்பீடு போன் வெளியாகி இருக்கிறது. ஜிடி மோட் (GT Mode), 90 எப்பிஎஸ் (FPS) மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் (Stainless Steel VC Cooling) போன்ற கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக பீச்சர்களும் பேக் செய்யப்பட்டுள்ளன.

ரியல்மி பி1 ஸ்பீடு 5ஜி அம்சங்கள் (Realme P1 Speed 5G Specifications): இந்த ரியல்மி போனில் பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இந்த பிளாட் டிஸ்பிளேவுக்கு ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. 8 ஜிபி ரேம் மாடலில் 8ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 12ஜிபி ரேம் மாடலில் 14ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது.
இதுபோக ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Energy 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி15 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருவதால் பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டைவிட கூடுதலாக எதிர்பார்க்கலாம். கேமிங் பிரியர்களுக்கு கூடுதலாக ஜிடி மோட் மற்றும் 90 எப்பிஎஸ் கிடைக்கிறது.

இந்த ரியல்மி பி1 ஸ்பீடு 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 5 (realme UI 5) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + ஏஐ லென்ஸ் வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. 5ஜி டூயல் மோட் (5G Dual Mode) கனெக்டிவிட்டி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), IP65 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி போனானது டெக்சர்ட் டைட்டானியம் (Textured Titanium) மற்றும் பிரஷ்டு ப்ளூ (Brushed Blue) கலர்களில் களமிறங்கி இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,999ஆகவும் இருக்கிறது. ரூ.2000 அறிமுக சலுகையில் விற்பனைக்கு வர இருக்கிறது. அக்டோபர் 20ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. ரியல்மி.காம் (realme.com) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








